Posts Tagged ‘கடாபி’

கடாபி புகைப்படம் மூலம் வைரஸ் பரவும் அபாயம்


[ திங்கட்கிழமை, 24 ஒக்ரோபர் 2011, 02:08.35 பி.ப GMT ]
லிபிய அதிபர் கடாபி கொல்லப்பட்டதை பரபரப்பாக பேசப்படும் நிலையில் அவரது புகைப்படத்தோடு கணணியை முடக்கச்செய்யும் வைரஸ்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இத்தகவலை பிரபல கணணி பாதுகாப்பு நிறுவனமான சோப்ஸின் தொழில்நுட்ப ஆலோசகர் கிரஹாம் குலுலி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தியில், மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் லிபிய அதிபர் காடபியின் புகைப்படத்தில், கணணியை பாதிக்கக்கூடிய வைரஸ்கள் இருப்பதாகவும், இந்த மின்னஞ்சலை திறந்தால் கணணி செயல்பாட்டை முடக்கச்செய்யும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் கணணியில் உள்ள தகவல்களை திருடவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளதால், இந்த புகைப்படத்தை பற்றி சைபர் கிரைம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.நன்றி லங்காசிறி

 

 

ஒருபோதும் சரணடையமாட்டேன் எனது உயிர் இறைவனிடமே இருக்கிறது


நேட்டோ படைகளின் தாக்குதலுக்கு மத்தியில் கடாபி உரை

நேட்டோ படைகளின் தாக்குதல் உக்கிரமடைந்த போதிலும் ஒரு போதும் சரணடையப் போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ள லிபிய தலைவர் முஅம்மர் அல் கடாபி, தனது உயிர் இறைவனின் கைகளிலேயே இருப்பதாகவும் மரணத்தைப் பற்றி ஒருபோதும் தான் அஞ்சியது கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.

நீண்ட இடைவெளியின் பின்னர் லிபிய அரச தொலைக்காட்சி மூலமாக வெளியுலகுக்கு ஆற்றிய உரையின் போதே கடாபி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“நான் இப்போது உங்களோடு உரையாடிக் கொண்டிருக்கும் சமயத்திலும் என்னைச் சுற்றி குண்டுகள் வீழ்ந்து வெடித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் எனது உயிர் இறைவனின் கைகளிலேயே இருக்கிறது. மரணத்தைப் பற்றியோ அல்லது உயிர் வாழ்வது பற்றியோ நாம் ஒருபோதும்

நேட்டோ படைகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் பொது மக்கள் உட்பட 31 பேர் கொல்லப்பட்டதாகவும் லிபிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிந்திக்கவில்லை. எமது சிந்தனையெல்லாம் எமது நாட்டின் பாதுகாப்பைப் பற்றியதே” என்றும் கடாபி தனதுரையில் குறிப்பிட்டுள்ளார்.

கடாபி தங்கியிருக்கும் கட்டிடத்தின் மீது பலத்த குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த சமயமே இந்த நேர்காணல் பெறப்பட்டதாக அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. அத்துடன் தனக்காக போராடும் குழுக்களின் தலைவர்கள் சிலரை கடாபி கட்டித் தழுவும் காட்சிகளும் அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளன.

கடந்த சில வாரங்களாக வெளியுலகுடன் தொடர்பற்றிருந்த கடாபி நேட்டோ படைகளின் பலத்த குண்டுத் தாக்குதல்களுக்கு மத்தியிலும் தொடர்ச்சியாக தனது பணியை முன்னெடுத்து வருவதை தெளிவுபடுத்துவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

கடாபி தங்கியிருக்கும் கட்டிடத்தை இலக்கு வைத்து நேற்று முன்தினம்
(நன்றி விடிவெள்ளி)